​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்த 4 பேர் கைது

Published : Mar 19, 2018 10:38 PM

புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்த 4 பேர் கைது

Mar 19, 2018 10:38 PM

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞாயிற்றுக் கிழமை இரவு 12.40 மணி அளவில், புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஜோசப், அருணாசலம், முகமது யாசின், அப்துல் ரஹீம்ஆகிய 4 பேரும் வழிமறித்துள்ளனர். பணியில் இருந்த நடத்துனர் பாலசந்தருடன் தகராறு செய்த 4 பேரும், பேருந்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன், , 4 பேரையும் கைது செய்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பேருந்தை சேதப்படுத்திய 4 பேர் மீதும் நடத்துனர் புகார் அளித்துள்ளார்.