​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

Published : Oct 24, 2018 8:08 AM

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

Oct 24, 2018 8:08 AM

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில், கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.


இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் நடைபெறுவதையொட்டி, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது.

ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பந்த் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கவுகாத்தியில் தோற்ற மேற்கிந்திய தீவு அணி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.