​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி

Published : Oct 24, 2018 8:03 AM

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி

Oct 24, 2018 8:03 AM

புரோ கபடி லீக் போட்டியில் புனே அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. புனேவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே 5 ஆட்டங்களில் தோற்றுவிட்ட நிலையில், வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் அணியின் புள்ளிகள் வேகமாக உயர்ந்தது.

அஜய் தாக்கூர் சிறப்பாக ஆடி 12 ரெய்டு பாய்ண்ட்கள் பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகளில் பெற்ற தொடர் தோல்விக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.