​​ இரண்டுமுறை பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன்: சீதாராம் யெச்சூரி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டுமுறை பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன்: சீதாராம் யெச்சூரி

Published : Jan 25, 2018 10:40 AM

இரண்டுமுறை பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன்: சீதாராம் யெச்சூரி

Jan 25, 2018 10:40 AM

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தாம் இரண்டுமுறை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்திலும் அதற்கு முன் டெல்லியில் நடைபெற்ற அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்திலும் தாம் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் திரிபுரா தேர்தல் வரும் நிலையில், பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என கட்சியின் தலைவர்கள் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் யெச்சூரி கூறினார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என்ற யெச்சூரியின் கருத்துக்கு பிரகாஷ் காரத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.