​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேஸ் ஜம்ப் போட்டி

Published : Oct 24, 2018 7:16 AM

சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேஸ் ஜம்ப் போட்டி

Oct 24, 2018 7:16 AM

சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேஸ் ஜம்ப் போட்டிகளில் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குய்ஷாவ் மாகாணத்தில் ((Guizhou Province)) பாலிங் ஆற்றுப்பாலத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. 375 மீட்டர் உயரமுள்ள இந்தப் பாலத்தில் இருந்து வீரர்கள் குதித்து பாராசூட் மூலம் தரையிறங்கிய காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

அப்போது சில வீரர்கள் வானிலே அணிவகுத்து வரிசையாகச் சென்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இந்தப் போட்டியில் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.