​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி, டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

Published : Oct 23, 2018 7:18 PM

மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி, டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

Oct 23, 2018 7:18 PM

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று எதிர்பார்ர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில்  47 ரன்களை எடுத்தால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை டெண்டுல்கரிடம் இருந்து கோலி தட்டிப்பறிப்பார்.

தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெண்டுல்கர் 39 போட்டியில் விளையாடி 1,573 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சதமும், 11 அரை சதமும் அடங்கும். விராட்கோலி 28 ஆட்டத்தில் 1527 ரன் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறார். இதில் 5 சதமும், 9 அரை சதமும் அடங்கும்.