​​ ஆவடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆவடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆவடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

Jan 25, 2018 10:38 AM

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குடோன் உரிமையாளரைக் கைது செய்தனர்.

திருநின்றவூரைச் சேர்ந்த செல்வசேகர் என்பவருக்குச் சொந்தமான குடோனை போலீசார் சோதனையிட்டதில், அங்கு 2 ஆயிரத்து 800 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் செல்வ சேகரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.