​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம்

Published : Oct 23, 2018 11:33 AM

உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம்

Oct 23, 2018 11:33 AM

ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.

65கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஜப்பான் வீரர் தகுட்டோ ஓட்டோகுரோ ஆகியோர் மோதினர். இந்தப் போட்டியில் 16க்கு ஒன்பது என்கிற கணக்கில் ஜப்பானின் தகுட்டோ ஓட்டோகுரோ வென்று தங்கப் பதக்கம் பெற்றார்.

இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அமிர்தசரசில் ரயில் மோதி உயிரிழந்தவர்களுக்கு இந்தப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாகவும், அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பஜ்ரங் புனியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.