​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ISL கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி... புள்ளிப் பட்டியலில் முதலிடம்

Published : Oct 23, 2018 2:40 AM

ISL கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி... புள்ளிப் பட்டியலில் முதலிடம்

Oct 23, 2018 2:40 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் புனே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல்பாதி இறுதியில் 41 மற்றும் 43வது நிமிடங்களில் சுனில் சேத்ரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து பெங்களுரு அணியை முன்னிலை பெறச் செய்தார்.

64வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிக்கு ஒரு கோல் அடித்தார். புனே அணி கோல் எதுவும் அடிக்காததால், ஆட்ட நேர இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 7 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.