​​ மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published : Jan 25, 2018 10:28 AM

மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Jan 25, 2018 10:28 AM

மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக, அதில் கதாநாயகனாக நடித்த விமல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் அளித்துள்ள மனுவில், ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் படம் தயாரித்திருப்பதாகவும், பட வெளியீடு தொடர்பான விளம்பரத்தில் தமது பெயர் இல்லை என்றும் கூறியுள்ளார்.

படத்தயாரிப்புக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் தாம் செலவு செய்திருப்பதாகவும்,படம் வெளியானதும் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தன்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணேசன் தனது மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப் பார்ப்பதாகவும், தமக்குத் தர வேண்டிய பணத்தை வசூலித்து தருமாறும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.