​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒருநாள் போட்டியில் 6 முறை 150 ரன்களைக் கடந்த ஒரே வீரர் ரோகித் சர்மா

Published : Oct 22, 2018 4:32 PM

ஒருநாள் போட்டியில் 6 முறை 150 ரன்களைக் கடந்த ஒரே வீரர் ரோகித் சர்மா

Oct 22, 2018 4:32 PM

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டன் ரோகித் சர்மா 20ஆவது சதம் அடித்ததுடன், 152 ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இவர் 150 ரன்களைக் கடப்பது இது ஆறாவது தடவையாகும். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது. சாதனை புரிந்த ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக் பாராட்டியுள்ளார்.