​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லக்னோவில் சட்டமேலவைத் தலைவர் மகன் அடித்துக் கொன்ற வழக்கில், குடித்துவிட்டு வந்ததால் அடித்துக் கொன்றதாகத் தாய் ஒப்புதல்

Published : Oct 22, 2018 10:51 AM

லக்னோவில் சட்டமேலவைத் தலைவர் மகன் அடித்துக் கொன்ற வழக்கில், குடித்துவிட்டு வந்ததால் அடித்துக் கொன்றதாகத் தாய் ஒப்புதல்

Oct 22, 2018 10:51 AM

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சட்டமேலவைத் தலைவர் ரமேஷ்யாதவின் மகன் அபிஜித்தை அடித்துக் கொன்றதாக அவரது தாயையும் அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலச் சட்ட மேலவைத் தலைவராக இருப்பவர் ரமேஷ் யாதவ். இவரின் இரண்டாவது மனைவி மீராவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இளைய மகன் அபிஜித் லக்னோ ஹசரத்கஞ்சில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது இயற்கையான மரணம் என அவரின் தாய் மீரா கூறிய நிலையில், ஐயம் எழுந்ததால் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அபிஜித்தை அடித்துக் கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் தாய் மீராவையும் அண்ணன் அபிசேக்கையும் காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது, அபிஜித் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அவரை அடித்துக் கொன்றதாக மீரா ஒப்புக் கொண்டார். இதையடுத்து மீராவையும் அபிசேக்கையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.