​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

Published : Oct 22, 2018 7:23 AM

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

Oct 22, 2018 7:23 AM

கொலம்பிய நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

பரான்காபெர்மஜா ((Barrancabermeja)) என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை இப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் 5 குழந்தைகள் உள்பட 9 பேர் மண்ணில் புதைந்து உயரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.