​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் 19.75 கிலோ குங்குமப்பூ பறிமுதல்

Published : Oct 22, 2018 6:55 AM

சென்னை விமான நிலையத்தில் 19.75 கிலோ குங்குமப்பூ பறிமுதல்

Oct 22, 2018 6:55 AM

துபாயில் இருந்து விமானத்தில் குங்குமப்பூவைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சென்னை விமான நிலையச் சுங்கத் துறையினர், 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவையும் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சாகுல் அமீது மரைக்காயர் என்கிற பயணியின் உடைமைகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது அதில் ஒவ்வொன்றும் 25 கிராம் எடையுள்ள 470 பொட்டலங்களில் ஈரானிய குங்குமப்பூ இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவைப் பறிமுதல் செய்ததுடன், அதைக் கடத்தி வந்த சாகுல் அமீது மரைக்காயரையும் கைது செய்தனர்.