​​ திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு

Oct 21, 2018 12:38 PM

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில்  உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான 4 ஆயிரத்து 350 ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆலயங்களில் திருவிழாக்களின் போது பாதுகாப்பு மையத்திலிருந்து சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் மீண்டும் கொண்டுவரப்படுவது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் சுவாமி சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவின் போது ஆலயத்திற்கு 12 ஐம்பொன் சிலைகள் கொடுக்கப்பட்டதாகவும், அவற்றில்  8 சிலைகள் மட்டுமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் உண்மைத்தன்மை குறித்து சிலைகடத்தல் தடுப்பு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையிலான போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு 2 நாட்கள் நடைபெறும் என்றும், சிலைகளின் உயரம், எடை, அகலம், சிலைகளின் வடிவமைப்பு ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த கருங்கல் வினாயகர் சிலை,நந்தி சிலை, கருங்கல் தூண்கள் காணமால் போனதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இதுகுறித்தும் ஆய்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.