​​ தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

Published : Oct 20, 2018 12:57 PM

தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

Oct 20, 2018 12:57 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுவதால், 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலையில் இருந்து, அதிகாலை 3 மணி வரை 76ஆயிரத்து 514 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 33 அறைகள், இரண்டு கிலோ மீட்டர் தூரம் நீண்டிருந்த வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 24 மணி நேரம் கழித்து தரிசனம் செய்து வருகிறனர். ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தால் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு விஐபி சிபாரிசு கடித தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறனர்.

வரும் நாட்களில் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.