​​ மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Oct 20, 2018 12:54 PM

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், மரணம் அடைந்தததைத் தொடர்ந்து 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது நியமனத்துக்கும், பட்டாபிஷேகத்துக்கும் எதிரான வழக்கில் 11-வது மடாதிபதியின் உயிலில் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவருக்குப் பதில் 3-வது நபர் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது என்றும் சிவில் வழக்கு தான் தொடரமுடியும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், மத சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றனர்.

புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்கக் கோரப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், இந்து அறநிலையத்துறை 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.