​​ விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு

Published : Oct 19, 2018 11:15 AM

விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு

Oct 19, 2018 11:15 AM

விஜயதசமியான இன்று வித்யாரம்பம் என்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஜயதசமியான இன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகள் இன்று திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்தால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக இன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தமிழகத்தின் முதல் மாதிரிப்பள்ளியான சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., வகுப்புகளுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு பள்ளியிலும் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் இன்று காலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். தட்டில் அரிசியை பரப்பி, அதில் தமிழின் முதல் எழுத்தாம் "அ" என்ற உயிரெழுத்தை எழுதவைத்து தங்க குச்சி மூலம் நாக்கிலும் எழுதினார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.