​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published : Oct 17, 2018 1:50 PM

குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Oct 17, 2018 1:50 PM

குட்கா வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செந்தில்குமார், சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களின் நீதிமன்றக்காவல் இன்றுடன் நிறைவடைந்தததை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவகர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவலை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.