​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, விமான நிலைய அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் மூலிகைச்செடிகள் நடப்பட்டன

Published : Oct 17, 2018 12:08 PM

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, விமான நிலைய அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் மூலிகைச்செடிகள் நடப்பட்டன

Oct 17, 2018 12:08 PM

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலைய அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் 15 ஆயிரம் மூலிகைச் செடிகள் நடப்பட்டு வருகின்றன.

இன்று நாடு முழுவதும் தேசிய ஆயுர்வேத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, உலக சாதனை முயற்சியாக 15 ஆயிரம் மூலிகைச் செடிகளை நடும் நிகழ்ச்சி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், விமான நிலைய ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, 81 வகையிலான 15 ஆயிரம் மூலிகைச் செடிகளை நட்டு வருகின்றனர்.