​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாண்டவர் எனக் கூறி இந்துக்களை ஏமாற்ற காங்கிரஸ் முயற்சி : நிர்மலா சீத்தாரமன்

Published : Mar 19, 2018 12:52 AM

பாண்டவர் எனக் கூறி இந்துக்களை ஏமாற்ற காங்கிரஸ் முயற்சி : நிர்மலா சீத்தாரமன்

Mar 19, 2018 12:52 AM

ராமரை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி பாண்டவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது ஏன் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகுல்காந்தி பாஜக மீது முன்வைத்த சரமாரிக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிர்மலா சீத்தாராமன், அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி, தன்னை பாண்டவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதா என்று வினவியுள்ளார். இந்து மதம் மற்றும் நம்பிக்கைகளை போலியாக பேசி காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ராகுல்காந்தியின் பேச்சு இழப்பைச் சந்தித்தவரின் பொருள் ஏதுமற்ற வெற்றுக் கூச்சல் என்றும், தமது குடும்பப் பெருமையைக் கொண்டாடுவதற்காகவே சாவர்க்கரை விமர்சித்திருப்பதாகவும் நிர்மலா சீத்தாராமன் சாடியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்திற்கு காங்கிரஸ் மட்டுமே முழுப்பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மின்னணு இயந்திரத்தின் மூலம் வாக்களிப்பதில் எளிமை மற்றும் வெளிப்படைத் தன்மை சாத்தியப்பட்டிருப்பதாகவும், இதனை விரும்பாததாலேயே காங்கிரஸ் மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கோருவதாகவும் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் இருக்கும் ராகுல்காந்தி, நீதிமன்றத்தால் நிரபராதி என கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமித்ஷாவை விமர்சிப்பதா என்றும் நிர்மலா சீத்தாராமன் சாடினார்.