​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Published : Oct 16, 2018 4:31 PM

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Oct 16, 2018 4:31 PM

குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், மூவரையும் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி திருநீல பிரசாத் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முடியவில்லை என்ற சிபிஐயின் வாதத்தை ஏற்று ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.