​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வு

Published : Oct 16, 2018 4:27 PM

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வு

Oct 16, 2018 4:27 PM

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு யைமயத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஆய்வு நடத்தினார்.

விளமல் கிராமத்தில் உள்ள பழமையான பதஞ்சலி மனோகரர் கோயிலுக்குச் சொந்தமான 12 ஐம்பொன் சிலைகள், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. கடந்த மாதம் பதஞ்சலி மனோகரர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக ஐம்பொன் சிலைகளை வாங்கச் சென்றபோது, 8 ஐம்பொன் சிலைகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன. ஆனால், பதிவேட்டில் 12 ஐம்பொன் சிலைகள் இருப்பதாக பதிவாகியிருந்தது. 4 ஐம்பொன் சிலைகள் மாயமானது குறித்து விளமல் கோயில் நிர்வாகிகள் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் கடந்த மாதமே புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், திருச்சியிலிருந்து வந்த சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் அண்ணாதுரை, திருவாரூர் கோயிலில் இன்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளை பார்வையிட்ட அவர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.