​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமானநிலைய சுற்றுச்சுவரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உரசிய விவகாரத்தில் விசாரணை

Published : Oct 16, 2018 4:21 PM

விமானநிலைய சுற்றுச்சுவரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உரசிய விவகாரத்தில் விசாரணை

Oct 16, 2018 4:21 PM

திருச்சியில், கடந்த 12ஆம் தேதி துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுற்றுச்சுவர் மீது உரசி இடித்து தள்ளிய விவகாரம் தொடர்பாக, விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தினேஷ்குமார் யாதவ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், இன்று திருச்சி விமான நிலையம் வந்தனர். விபத்தை ஏற்படுத்திய விமானம் புறப்படுவதற்கு முன், விமானிக்கும், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவை, புலனாய்வு குழுவினர் கேட்டு வாங்கினர்.

பின்னர் விமான ஓடுதளபாதைக்குச் சென்ற அவர்கள், விமான டயர்கள் வழுக்கும் அளவிற்கு ஓடுதள பாதை உள்ளதா? அல்லது, நன்கு பிடிமான தன்மை கொண்டதாக உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். பின்னர், விமானம் உரசிய சுற்றுச்சுவர் பகுதிக்கு வந்த அவர்கள், அங்கு உள்ள நிலையை கேமிராவில் பதிவு செய்தனர். இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, விமானம், எதனால் சுற்றுச்சுவரில் உரசியது என்பதற்கான காரணம் தெரியவரும்.