​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி

Published : Oct 16, 2018 12:50 PM

பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி

Oct 16, 2018 12:50 PM

மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இன்று காலை கொல்கத்தாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து ஹூக்ளி (Hooghly) மாவட்டத்துக்குட்பட்ட ஹரிபால் (Haripal) என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு திரண்ட உள்ளூர் மக்களும், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.