​​ HDFC வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் புகார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
HDFC வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் புகார்

Published : Oct 15, 2018 11:02 PM

HDFC வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் புகார்

Oct 15, 2018 11:02 PM

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளதாக எச்.டி.எஃப்.சி வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சத்யா, எச்.டி.எஃப்.சி வங்கியின் தி நகர் கிளை ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து 6,800 ரூபாய் பணம் மாதத் தவணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

image

இது தொடர்பாக வங்கியில் புகார் அளித்த போதுதான் மூலக்கடை சங்கீதா மொபைல் கடையில் சத்யாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வேறு ஒரு நபரின் புகைப்படத்தைக் கொண்டு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐ-போன் வாங்கப்பட்டது தெரியவந்தது.

வங்கி நிர்வாகம் முதல் மாதம் பிடிக்கப்பட்ட தவணை பணத்தை சத்யாவின் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சத்யாவின் வங்கிக் கணக்கிலிருந்து அடுத்த மாதத் தவணையும் பிடிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்புள்ளதாக சத்யா குற்றம்சாட்டியுள்ளார்.