​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமானத்தில் இருந்து தவறிவிழுந்த ஏர் இந்தியா பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதி

Published : Oct 15, 2018 10:49 AM

விமானத்தில் இருந்து தவறிவிழுந்த ஏர் இந்தியா பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதி

Oct 15, 2018 10:49 AM

மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த ஏர் இந்தியா பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு AI 864 என்ற எண் கொண்ட B777 ரக விமானம் மும்பையின் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படத் தயாரானது. அப்போது 53 வயதான ஹர்ஷா லோபோ ((Harsha Lobo)) என்ற விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தின் கதவை அடைக்க முற்பட்டார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி விமானத்தில் இருந்து தரையில் விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.