​​ காலா திரைப்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நடிகர் ரஜினி, பா. ரஞ்சித் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலா திரைப்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நடிகர் ரஜினி, பா. ரஞ்சித் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

காலா திரைப்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நடிகர் ரஜினி, பா. ரஞ்சித் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Jan 24, 2018 7:36 PM

காலா திரைப்படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காப்புரிமை தொடர்புடைய வழக்கு என்பதால் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1996 முதல் 2006 வரை கரிகாலன் படத் தலைப்பு ஆண்டு தோறும் புதுப்பிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு தென்னிந்திய வர்த்தக சபை புதுப்பிக்க மறுத்துவிட்டது என ராஜசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தலைப்பை புதுப்பித்தல் குறித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதிகளை செல்லாது என அறிவிக்கவும், காலா திரைப்படத்திற்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.