​​ சவீதா நிகர்நிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பெல்ஜியம் தூதரக அதிகாரி பட்டங்களை வழங்கினார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவீதா நிகர்நிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பெல்ஜியம் தூதரக அதிகாரி பட்டங்களை வழங்கினார்

Published : Mar 18, 2018 9:15 PMசவீதா நிகர்நிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பெல்ஜியம் தூதரக அதிகாரி பட்டங்களை வழங்கினார்

Mar 18, 2018 9:15 PM

சவீதா நிகர்நிலைப் பல்கலைகப் பல்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பெல்ஜியம் நாட்டின் தூதரக அதிகாரி மார்க் வேன் டே பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பொறியியல், பட்டமேற்படிப்பு, ஆய்வு மேற்படிப்பு மற்றும் மருத்துவப் படிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பயின்ற ஆயிரத்து 116 மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெல்ஜிய தூதரக அதிகாரி மார்க் வேன் டே, இந்தியாவைச் சேர்ந்த 800 மாணவர்கள் தங்களது நாட்டில் பயின்று வருவதாக கூறினார். இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெல்ஜியம் செல்வததற்கான கல்வி விசா நடைமுறை எளிமைப்படுத்தபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தென்னிந்தியாவில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில், மேற்படிப்புக்காக பெல்ஜியம் செல்வதற்கான விசா வழங்கப்பட்டு வருவதாகவும் மார்க் வேன் டே தெரிவித்தார்.