​​ பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஜன.31ஆம் தேதி TTV தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஜன.31ஆம் தேதி TTV தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஜன.31ஆம் தேதி TTV தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Jan 24, 2018 7:30 PM

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 31ஆம் தேதி திருவள்ளூரில் டி.டி.வி.தினகரன் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும், இந்த போராட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்க இருப்பதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.