​​ மரங்களை வெட்ட இடைக்கால தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரங்களை வெட்ட இடைக்கால தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ்

Published : Oct 12, 2018 3:55 PM

மரங்களை வெட்ட இடைக்கால தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், திட்ட இயக்குநருக்கு நோட்டீஸ்

Oct 12, 2018 3:55 PM

மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை அதிக அளவில் போக்குவரத்து இல்லாத சாலை என்றும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதால் சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை விடுமுறைக்கால நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி ஒத்திவைத்தனர்.