​​ தமிழக - கேரள வனப்பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக - கேரள வனப்பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் ஆய்வு

தமிழக - கேரள வனப்பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் ஆய்வு

Oct 12, 2018 2:44 PM

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து அதிரடிப்படை போலீசார் ஆய்வு நடத்தினர்.

தமிழக - கேரள வனப்பகுதியை ஒட்டி கொலக்கம்பை, மானார், மூப்பர்காடு, சிங்காரா உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் சிலர் ஊடுருவி உள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளனர். அதன் படி 15 க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் மானார், சிங்காரா உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.