​​ நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை 5 வாரத்திற்குள் நியமிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை 5 வாரத்திற்குள் நியமிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை 5 வாரத்திற்குள் நியமிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 12, 2018 2:42 PM

தமிழ்நாடு முழுவதும், நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை ஐந்து வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பின் செயலாளர் லோகு என்பவர், பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அதில், நுகர்வோர் பிரச்சினை தொடர்பாக கொள்கை முடிவுகளை எடுக்க, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படும், மாநில  மற்றும்  மாவட்ட  நுகர்வோர்  பாதுகாப்பு குழு  உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐந்து வாரத்திற்குள் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.