​​ தொழிற் நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது நாடு - பிரதமர் நரேந்திர மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிற் நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது நாடு - பிரதமர் நரேந்திர மோடி

தொழிற் நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது நாடு - பிரதமர் நரேந்திர மோடி

Oct 11, 2018 6:14 PM

தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நாடு நடை போடுவதாகவும், இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

டெல்லியில் நான்காவது தொழிற் புரட்சி மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், மத்திய அரசின் திறன் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் இளைஞர்களை புதிய தொழிற் துறைகளுக்கு தயார் படுத்தி உள்ளது என்றார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் கிராமங்களிலும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது என்ற அவர், தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள தொழிற் புரட்சி மையம், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் பயன் அளிக்கும் என்றார். தொழிற் புரட்சி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே தீர்வாக அமையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.