​​ இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே இந்தியா வருகிறார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே இந்தியா வருகிறார்

இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே இந்தியா வருகிறார்

Oct 11, 2018 5:51 PM

இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே ((Giuseppe Conte)) இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய - இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் இத்தாலியப் பிரதமர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இந்த உச்சிமாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியா வரும் இத்தாலி பிரதமர் கோன்டே, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார்