​​ சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

Oct 11, 2018 5:47 PM

சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் வைரவணிகர் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குஜராத்தின் சூரத் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நீரவ் மோடியின் பயர்ஸ்டார் வைர வணிக நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து வைரத்தை இறக்குமதி செய்து பட்டைதீட்டி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்வதற்குச் சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து வரிவிலக்குடன் இறக்குமதி செய்த வைரங்களைப் பட்டைதீட்டி உள்நாட்டில் விற்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வைரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வரி ஏய்ப்புச் செய்துள்ளது.

இது தொடர்பாக 2014டிசம்பரில் மும்பையில் உள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் நீரவ் மோடி மீது புகார் அளித்தது. இந்த வழக்கில் ஆஜராகாத நீரவ் மோடியைத் தலைமறைவானவர் என அறிவிக்க வேண்டும் என மும்பை பெருநகர நீதிமன்றத்தில் வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் கேட்டுக் கொண்டது. அதன்படி நீரவ் மோடி தலைமறைவானவர் என நீதிபதி அறிவித்தார். நீரவ் மோடி நவம்பர் 15ஆம் நாள் நீதிமன்றத்துக்கு நேரில் வராவிட்டால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.