​​ தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலில் 41 சிலைகள் மாற்றம்?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலில் 41 சிலைகள் மாற்றம்?

Published : Oct 11, 2018 5:28 PM

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலில் 41 சிலைகள் மாற்றம்?

Oct 11, 2018 5:28 PM

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலின் வைக்கப்பட்டிருந்த தொன்மையான சிலைகளில், 41 சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதால், அதன் தொன்மை குறித்த ஆய்வை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். 

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவிலின் அர்த்த மண்டபத்தில், கோவில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளில் பல சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர், இரண்டு கட்டங்களாக, ஏற்கனவே ஆய்வினை மேற்கொண்டனர். இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில், காவல்துறையினரும், மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையிலான தொல்லியத்துறை அதிகாரிகளும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மூன்றாம் கட்டமாக நடைபெறும் இந்த ஆய்வு, மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளில், 41 சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதால், அவற்றின் தொன்மை குறித்து, தொல்லியல் துறையினரோடு இணைந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். சிலைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தற்கால தமிழில் பொறிக்கப்பட்டிருப்பதால் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது...