​​ மாணவர்களுக்கு இலவச காலை உணவளிக்கும் தமிழ் ஆசிரியர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவர்களுக்கு இலவச காலை உணவளிக்கும் தமிழ் ஆசிரியர்

Published : Oct 11, 2018 5:07 PM

மாணவர்களுக்கு இலவச காலை உணவளிக்கும் தமிழ் ஆசிரியர்

Oct 11, 2018 5:07 PM

சென்னை கொடுங்கையூரில் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவர், பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அன்றாடம் இலவச காலை உணவு வழங்கி வருவது பாராட்டைப் பெற்றுள்ளது. கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவர் இளமாறன்.

இவர், பள்ளிக்கு வரும் குழந்தைகள் பலர் ஏழ்மையின் காரணமாக காலை உணவு உண்ணாமல் வருவதை அறிந்தார். இதை அடுத்து அவர்களுக்கென தனது ஊதியத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஒதுக்கிய இளமாறன், மாநகராட்சியின் அனுமதியோடு அம்மா உணவகத்தில் இருந்து தினமும்  இட்லி வாங்கி வந்து மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார்.

  1. செல்வமணி R

    கல்வியோடு உணவையும் அளிக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

    Reply