​​ குடியரசுத் தினத்தில் திட்டமிட்டபடி மோகன் பகவத் பள்ளியில் கொடியேற்றுவார்-RSS
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசுத் தினத்தில் திட்டமிட்டபடி மோகன் பகவத் பள்ளியில் கொடியேற்றுவார்-RSS

Published : Jan 24, 2018 2:28 PM

குடியரசுத் தினத்தில் திட்டமிட்டபடி மோகன் பகவத் பள்ளியில் கொடியேற்றுவார்-RSS

Jan 24, 2018 2:28 PM

குடியரசுத் தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான விதிகள் குறித்து கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரித்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, திட்டமிட்டபடி, தனியார் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என தெரிவித்துள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று, கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கேரள அரசின் இந்த உத்தரவு, மோகன் பகவத் கொடியேற்ற விதிக்கப்பட்ட மறைமுக தடை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மோகன் பகவத் கொடியேற்றவுள்ளது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளி என்றும், இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது என்றும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.