​​ ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

Published : Oct 11, 2018 11:06 AM

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

Oct 11, 2018 11:06 AM

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான உதகை, கொடைக்கானல் பங்களாக்கள் உள்ளிட்ட 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் விதிகளை மீறி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கார்த்திக்கு ஐஎன்ஸ் எக்ஸ் மீடியா லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை கார்த்தி பெயரிலும், அவரது நிறுவனமான அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்ட்டிங் பிரைவேட் லிமிடெட் பெயரிலும் உள்ள  54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் கொடைக்கானலில் 25இலட்ச ரூபாய் மதிப்புள்ள வேளாண் நிலம் ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. உதகையில் மூன்றே முக்கால் கோடி மதிப்புள்ள பங்களா ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கோத்தகிரியில் ஐம்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள பங்களா ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. டெல்லி ஜோர்பாக்கில் 16கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிலமும் கட்டடமும் கார்த்தி, அவர் தாய் நளினி ஆகியோரின் பெயர்களில் உள்ளன.

பிரிட்டனின் சோமர்செட்நகரில் 8கோடியே 67இலட்ச ரூபாய் மதிப்பிலான வீடு, குடில்கள், நிலம் ஆகியன ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்தின் பெயரில் உள்ளன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் 14கோடியே 57இலட்ச ரூபாய் மதிப்புள்ள டென்னிஸ் கிளப் மற்றும் நிலம் அட்வான்டேஜ் எஸ்ட்ரேட்டஜியா என்கிற கார்த்தியின் நிறுவனப் பெயரில் உள்ளது.

  1. Krishnan

    Very good N. Moodi

    Reply