​​ இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் துவக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் துவக்கம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் துவக்கம்

Oct 11, 2018 9:26 AM

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் கடும் சரிவுடன் துவங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக துவக்கத்திலேயே சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது- ஆனால் அதன் பிறகு சிறிதளவு சரிவில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டன.

இதே போல் இந்திய ரூபாய் மதிப்பும் இன்று சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 47 காசுகளாக குறைந்தது. உலக நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.