​​ வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலி

வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலி

Oct 11, 2018 8:19 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலியாகினர். 

குருமலை காட்டுபட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர். காடம்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மினி லாரியின் ஓட்டுநர் ராஜனுக்கு ஓட்டுநர் உரிமமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மலைகிராமங்களில் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புற மக்கள் மினிவேன்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். அவ்வாறு பொருட்களை வாங்கிவிட்டு திரும்பியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.