​​ கர்நாடக தேர்தல் ராமனுக்கும் – அல்லாவுக்கும் இடையிலான தேர்தல் என பேசிய பா.ஜ.க. MLA மீது வழக்குப்பதிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக தேர்தல் ராமனுக்கும் – அல்லாவுக்கும் இடையிலான தேர்தல் என பேசிய பா.ஜ.க. MLA மீது வழக்குப்பதிவு


கர்நாடக தேர்தல் ராமனுக்கும் – அல்லாவுக்கும் இடையிலான தேர்தல் என பேசிய பா.ஜ.க. MLA மீது வழக்குப்பதிவு

Jan 24, 2018 2:22 PM

கர்நாடகத்தில் வரவிருக்கும் தேர்தலை இந்து – முஸ்லீம் கடவுள்கள் இடையிலானது என ஒப்பிட்டு பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுனில்குமார், Bantwal தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொகுதியில் முஸ்லீம்களின் ஆசியுடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராம்நாத் ராய் வெற்றி பெற்று வருவதாக சுனில் கூறினார்.

வரவிருக்கும் தேர்தல் அல்லாவுக்கும் ராமனுக்கும் இடையிலான தேர்தல் என்றும் இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை இந்துக்கள் முடிவு செய்யட்டும் என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து சுனில்குமார் மீது இரு மதத்தினர் இடையே பகைமையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.