​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காக்னிஸன்ட் நிறுவனத்தில் இருந்து 200 மூத்த செயலதிகாரிகள் நீக்கம்?

Published : Oct 10, 2018 5:44 PM

காக்னிஸன்ட் நிறுவனத்தில் இருந்து 200 மூத்த செயலதிகாரிகள் நீக்கம்?

Oct 10, 2018 5:44 PM

காக்னிஸன்ட் நிறுவனத்தில் இருந்து மூத்த செயலதிகாரிகள் 200 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2 லட்சத்து 68 ஆயிரத்து 900 பேர் பணியாற்றும் பிரபல காக்னிஸன்ட் நிறுவனத்தில், போட்டிச் சூழல் நிறைந்த சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் பணியாட்களை நியமிக்கும் விவகாரத்தில் பல முக்கிய யுக்திகள் பின்பற்றப்படுவதாகக் கூறியுள்ளது.

அதன்படி, மூத்த செயலதிகாரிகள் நிலையில் உள்ள 200 பேரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்காக மட்டும்  அந்நிறுவனத்துக்கு 260 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பரஸ்பர விலகல் ஒப்பந்தப்படி, சட்ட ரீதியாக அழுத்தம் தர மாட்டோம் என சில நிறுவனங்கள் தங்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.