​​ வணிக வரித்துறை அலுவலக பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வணிக வரித்துறை அலுவலக பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Published : Oct 10, 2018 4:07 PM

வணிக வரித்துறை அலுவலக பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Oct 10, 2018 4:07 PM

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வழக்கறிஞர் அலுவலகத்தில் வணிக வரித்துறை பெண் ஊழியர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புதூர் நொச்சிக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர், கோவையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது கணவரின் நண்பர் சங்கர் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பெருந்துறையில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் சங்கர் மற்றும் சுலோச்சனா இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்ற சுலோச்சனா, அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பரிசோதித்தபோது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.