​​ தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் : மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் : மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்

Published : Jan 24, 2018 1:12 PM



தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் : மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்

Jan 24, 2018 1:12 PM

தலித் எனும் வார்த்தையை அலுவல் ரீதியான தொடர்புகளில் பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றில், தலித் என்ற வார்த்தை அரசியலமைப்பு ரீதியாக எந்த அங்கீகாரமும் பெறாதது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலித் எனும் வார்த்தை பட்டியல் பிரிவினரை சிறுமைப் படுத்தும் நோக்குடன் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. இம்மனுமீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தலித் என்ற வார்த்தைக்கு பதிலாக பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியிடினர் என்ற வார்த்தையை அலுவல் ரீதியான தொடர்புகளில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது.