​​ காணாமல் போன இளைஞரை கண்டு பிடித்துத் தர கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காணாமல் போன இளைஞரை கண்டு பிடித்துத் தர கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

காணாமல் போன இளைஞரை கண்டு பிடித்துத் தர கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

Jan 24, 2018 1:09 PM

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இளைஞர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த அல் அமின் என்ற இளைஞரை, செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்த சீனு, ஐயப்பன், முத்து ஆகியோர் அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அல் அமினை காணவில்லை என்று அவரது தந்தை சகர்மா குலசேகரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார்.

புகாரை போலீஸார் வாங்க மறுத்ததாக கூறப்படும் நிலையில் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.