​​ பிரபல ஜவுளிக்கடையில் விடுப்பு கேட்டபோது மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல ஜவுளிக்கடையில் விடுப்பு கேட்டபோது மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி


பிரபல ஜவுளிக்கடையில் விடுப்பு கேட்டபோது மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

Jan 24, 2018 1:07 PM

சென்னை தியாகராய நகரில் பிரபல ஜவுளிக்கடை மேலாளர் திட்டியதால், பெண் ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தியாகராய நகரில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் விடுப்பு கேட்டபோது, மேலாளர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண், ஜவுளிக்கடை கழிப்பறையில் உள்ள அமிலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் தற்கொலை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.