​​ லாரி ஓட்டுநரின் திறமையால் உயிர்தப்பிய இரு பெண்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரி ஓட்டுநரின் திறமையால் உயிர்தப்பிய இரு பெண்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி


லாரி ஓட்டுநரின் திறமையால் உயிர்தப்பிய இரு பெண்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சி

Jan 24, 2018 1:03 PM

புதுக்கோட்டையில் லாரி ஓட்டுநர் ஒருவரின் சமயோசிதத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் இருவர் உயிர் தப்பும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, சாந்தநாதபுரம் 3ம் வீதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் இருவர் நிலைதடுமாறி லாரியில் இடித்து கீழே விழுந்தனர்.

இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியதால், இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.