​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்புக்குச் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் வரவேற்பு

Published : Oct 05, 2018 7:17 PM

பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்புக்குச் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் வரவேற்பு

Oct 05, 2018 7:17 PM

பன்னீர்செல்வமும் தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது வரவேற்கத் தக்கது எனக் கோவை மாவட்டம் சூலூர்த் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னைச் சந்தித்துப் பேசியதாகத் தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது வரவேற்கத் தக்கது எனச் சூலூர்த் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். தினகரன் அணியும் இணைந்தால் கட்சி மேலும் வலுப்பெறும் என்றும், தினகரனுக்குப் பதவி கொடுத்தால் அதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கனகராஜ் தெரிவித்துள்ளார்.